ஊரடங்கில் ரகசிய திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

ஊரடங்கில் ரகசிய திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

ஊரடங்கு நேரத்தில் திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச மாநிலம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து திருமணம் உள்ளிட்ட எந்த சடங்குகளுக்கும் அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் இதனையும் மீறி ஒரு சிலர் திருமணம் செய்து வருவதாகவும் இதனை அடுத்து சுமார் 30 பேர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஒருசில மாவட்ட கலெக்டர்கள் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு நேரத்தில் திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்றும் ஊரடங்கு நேரத்தில் திருமணம் செய்தவர்களுக்கு திருமண பதிவுச்சான்றிதழ் கிடைக்காது என்றும் அதுமட்டுமின்றி அவர்கள் மீது 188 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை காரணமாக பலர் அண்டை மாநிலத்தில் குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று திருமணம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வேறு மாநிலம் சென்று திருமணம் செய்வதை மத்திய மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் ஒரு சில அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com