செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த வெங்காயம்: ஆன்லைன் ஆர்டரால் அவதி!

செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த வெங்காயம்: ஆன்லைன் ஆர்டரால் அவதி!

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஒருவருக்கு பார்சலில் வெங்காயம் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த சசிதாகூர் என்பவர் ஆன்லைன் மூலம் மொபைல் ஒன்றை ஆர்டர் செய்தார். ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள அந்த மொபைலுக்கு அவர் தனது கிரெடிட் கார்டு மூலம் டெலிவரி சார்ஜ் உடன் பணத்தை கட்டியுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து அவரது இல்லத்திற்கு பார்சல் வந்தது. ஆசை ஆசையாய் தான் ஆர்டர் செய்த செல்போன் வந்திருக்கும் என்று அவர் பார்சலை பிரித்து பார்த்த போது அதில் வெங்காயம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு போன் மூலம் தொடர்பு கொண்டு தான் ஆர்டர் செய்தது செல்போன் என்றும் ஆனால் பார்சலில் வந்திருப்பது வெங்காயம் என்றும் கூறினார். இதுகுறித்து தங்கள் அலுவலக முகவரிக்கு புகார் அனுப்பவும் என்றும் பத்து நாட்களில் உங்களுடைய மொபைல் போன் வந்து சேரும் என்றும் பதில் கிடைத்தது. ஆனால் தனக்கு இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் தான் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் அந்த இளைஞர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com