இரவு முழுவதும் கண்ட்ரோல் ரூம் தான்: மம்தா பானர்ஜி அதிரடி முடிவு!

இரவு முழுவதும் கண்ட்ரோல் ரூம் தான்: மம்தா பானர்ஜி அதிரடி முடிவு!

இன்று இரவு முழுவதும் கண்ட்ரோல் ரூமில் இருக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கக் கடலில் உருவான புயல் தீவிர புயலாக உருவாகி தற்போது ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலம் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது, யாஸ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் இந்த புயலால் மரங்கள் வேரோடு சாய்வது உள்பட பல சேதங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதும் புயலால் ஏற்பட்ட சேத பகுதியில் உடனடியாக கண்டறிந்து மீட்பு பணியை தொடங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இரவு முழுவதும் கன்ட்ரோல் ரூமில் தங்க முடிவு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்துள்ளார். புயல் சேதம் ஏற்படும் பகுதிகளை உடனுக்குடன் கண்டறிந்து மீட்பு படையினருக்கு உத்தரவு பிறப்பித்து மீட்பு பணியை துரிதப்படுத்த அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு முதலமைச்சரே கண்ட்ரோல் ரூமில் விடிய விடிய தங்க முடிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com