பாஜகவிலிரிந்து கழலும் முக்கியப் புள்ளிகள்... திரிணாமூலுக்கு படையெடுக்க வாய்ப்பு... மம்தாவின் நெத்தியடி!

பாஜகவிலிரிந்து கழலும் முக்கியப் புள்ளிகள்... திரிணாமூலுக்கு படையெடுக்க வாய்ப்பு... மம்தாவின் நெத்தியடி!

மேற்கு வங்கத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல்வேறு முக்கியப் புள்ளிகள் பாஜகவில் இணைந்தனர். அவர்களில் பலர் பாஜக சார்பில் மேற்கு வங்கத்தில் போட்டியிட்டனர். ஆனால், மீண்டும் திரிணாமூல் கட்சிப் பெரும்பான்மை இடத்தில் அசுர பலத்தோடு வெற்றி பெற்றதோடு, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பையும் ஏற்றார் மம்தா.

இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து சென்ற ஆண்டு பாஜகவுக்குத் தாவிய முக்கியப் புள்ளிகள் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கே படையெடுக்க ஆரம்பித்து உள்ளனர். சென்ற 2017 ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகிய முதல் முக்கியப் புள்ளி தான் முகுல் ராய்.

பாஜகவின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாமல் அவர் மீண்மும் மம்தாவிடமே சரணடைந்துள்ளார். பாஜகவிலிருந்து பலர் மீண்டும் திரிணாமூல் வர திட்டமிட்டிருந்தாலும், இதற்கு மேல் கட்சிக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திரிணாமூல் காங்கிரஸ் வட்டத்தில் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள மம்தா, 'முகுல் ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கே வந்தது மகிழ்ச்சி. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும். இன்னும் நிறைய பேர் திரிணாமூலுக்கு வர முயல்வார்கள். ஆனால் பணத்துக்காகவும், பதவிக்காகவும் ஆசைப்பட்டு கட்சிக்கு துரோகம் இழைத்த யாருக்கும் இங்கே இடம் கிடையாது' என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com