இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு கொரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு கொரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,62,727 என்றும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,120 என்றும் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் இதுவரை மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,37,03,655 என்றும் இதுவரை தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 37,10,525 என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இதுவரை மொத்தம் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 1,97,34,823 என்றும் இதுவரை மொத்தம் இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,58,317என்றும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் குரானா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் நாடு முழுவதும் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com