தமிழில் உறுதிமொழி கூறி கேரள சட்டமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பேற்ற எம்.எல்.ஏ!

தமிழில் உறுதிமொழி கூறி கேரள சட்டமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பேற்ற எம்.எல்.ஏ!

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், கேரள சட்டசபையில் எம்.எல்.ஏ-க்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அதில் ஒருவர் மட்டும் தமிழில் உறுதிமொழி கூறி, சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கேரளாவின் தேவிகுளம் தொகுதி, தமிழர்கள் அதிகமாக வாழும் இடம். அந்த தொகுதியில் இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.ராஜா போட்டியிட்டார. அவரை எதிர்த்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.குமார் போட்டியிட்டார்.

ராஜா, 59,049 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வந்தார். அதற்கு அடுத்தபடியாக டி.குமார், 51,121 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் வந்தார். இதன் மூலம் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜா, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று கேரள சட்டமன்றத்தில், தன் தாய் மொழியான தமிழில் உறுதிமொழி கூறி, பதவியேற்றுக் கொண்டார் ராஜா. இது குறித்தான காணொலி வைரலாகி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com