தமிழில் பதவியேற்ற கேரள எம்.எல்.ஏ செய்த பிழை: மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்!

தமிழில் பதவியேற்ற கேரள எம்.எல்.ஏ செய்த பிழை: மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்!

கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கேரளாவில் உள்ள தேவிகுளம் என்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எம் ராஜா என்பவர் தமிழில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கேரள சட்டசபை வரலாற்றில் தமிழில் பதவியேற்ற முதல் எம்எல்ஏ அவர்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் ராஜா எம்எல்ஏ கேரள சட்டமன்றத்தில் தமிழில் பதவியேற்ற நிலையில் தற்போது அவர் பதவி ஏற்றதில் ஒரு பிழை ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் அவர் மீண்டும் பதவியேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கேரள சட்டமன்ற உறுப்பினராக தமிழில் பதவிப்பிரமாணம் செய்த ராஜா உளமாற அல்லது கடவுள் அறிய உறுதி ஏற்கிறேன் என்று கூற வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு கூறாமல் விட்டு விட்டதால் மீண்டும் உறுதிமொழி ஏற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மற்றபடி அவர் தமிழில் பதவி ஏற்றதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் மீண்டும் அவர் பதவி ஏற்கும்போதும் தமிழிலேயே தான் பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com