2 டோஸ் எடுத்தும் கொரோனாவுக்கு பலியான போலீஸ் கான்ஸ்டபிள்: அதிர்ச்சி தகவல்

2 டோஸ் எடுத்தும் கொரோனாவுக்கு பலியான போலீஸ் கான்ஸ்டபிள்: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. மேலும் பெரும்பாலான மருத்துவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றே கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை ஒரு டோஸ் அல்ல, 2 டோஸ் போட்டும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருடைய உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததை அடுத்து அவர் இன்று காலமானார்.

2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டும் அவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மங்களூர் போலீஸ் கமிஷனர் சசிகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் இது மிகவும் அரிதான சம்பவம் என்றும் இந்த சம்பவத்தை கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடாமல் யாரும் இருக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com