யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

யாஷ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் தன்மையை கொண்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு புயலாக மாறியுள்ளது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. யாஷ் புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது என சற்று முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஷ் புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இந்த புயல் கரையை கடக்கும் போது மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் உம்ப்பன் புயல் மற்றும் டவ்தேவ் புயல் போன்ற அதி தீவிரமான புயல்களில் ஒன்று இந்த யாஷ் புயல் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே முன்கூட்டியே மீட்பு பணிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் புயல் பாதித்த பின் உடனடியாக மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மீட்பு பணிகளை கவனிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயல் கரையை கடக்கும்போது பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com