இந்தியாவில் Sputnik V கொரோனா தடுப்பூசி விலை எவ்வளவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Sputnik V தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் உரிமையை ஹைதராபாத்திலிருந்து செயல்பட்டு வரும் Dr. Reddy’s லெபாரட்ரீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் Sputnik V கொரோனா தடுப்பூசி விலை எவ்வளவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் நிலையில் ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது.

இந்த Sputnik V தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் உரிமையை ஹைதராபாத்திலிருந்து செயல்பட்டு வரும் Dr. Reddy’s லெபாரட்ரீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

தற்போது Sputnik V தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள Dr. Reddy’s லெபாரட்ரீஸ் ரூ.948 + 5% ஜிஎஸ்டி என விலையை நிர்ணைத்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகள் 600 ரூபாய், 1200 ரூபாய் ஒரு டோஸ் என தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு அரசுக்கு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்து இருந்தாலும் அது தனியார் மருத்துவமனைகளில் தான் அதிகளவில் பயன்பாட்டுக்கு வரும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com