ரூ.1000 கோடி இழப்பீடு: பாபா ராம்தேவ்-க்கு மருத்துவர் சங்கம் நோட்டீஸ்!

ரூ.1000 கோடி இழப்பீடு: பாபா ராம்தேவ்-க்கு மருத்துவர் சங்கம் நோட்டீஸ்!

நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாபா ராம்தேவ் ரூபாய் 1000 கோடி இழப்பீடு தர வேண்டும் என கோரி இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாபா ராம்தேவ் நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் மத்திய அமைச்சர் ஒருவரும் இதனை கண்டித்ததை அடுத்து பாபா ராம்தேவ் வேறு வழியின்றி தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இருப்பினும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நவீன மருத்துவத்தை அவதூறாக பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் ரூபாய் 1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com