கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை நானும் உணருகிறேன்: பிரதமர் மோடி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை நானும் உணருகிறேன்: பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் வேதனையும் தானும் உணருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர், கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு நாம் போரிட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

'இந்த கொரோனா வைரஸ் தொற்றால் நமக்கு நெருக்கமானவர்களை இழந்து துன்புற்று இருக்கிறோம். இந்த நோயால் நாட்டின் குடிமக்கள் பலரும் அனுபவித்து வரும் வலியையும் வேதனையையும் என்னாலும் உணர முடிகிறது.

உங்களின் தலைமை சேவகனாக என்னால் அனைத்து உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரும் பெருந்தொற்று நோயாக இது இருக்கிறது. உலகை அது சோதித்துக் கொண்டிருக்கிறது. நம் முன்னால் கண்ணுக்குத் தெரியாத எதிரி இருக்கிறான்.

போர்க்கால அடிப்படையில் அதில் வெற்றி பெற நாம் அனைத்து வித நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளோம். இதுவரை நாட்டில் 18 கோடி தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது. மக்கள், வாய்ப்பு கிடைக்கும் போது கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்.

கொரோனா தடுப்பூசி தான் இந்த போரில் நமக்கான கேடயமாக இருக்கும். கொரோனாவுக்கு எதிராக இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவோம்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com