2030ஆம் ஆண்டின் இலக்கை 2020ஆம் ஆண்டிலேயே சாதித்த தமிழகம்: ஆச்சரிய புள்ளிவிபரம்

2030ஆம் ஆண்டின் இலக்கை 2020ஆம் ஆண்டிலேயே சாதித்த தமிழகம்: ஆச்சரிய புள்ளிவிபரம்

இந்திய அளவில் 2030ஆம் ஆண்டு சாதிக்க வேண்டும் என்று கல்வித்துறை நிர்ணயித்த இலக்கை தமிழ்நாடு 2020ஆம் ஆண்டிலேயே சாதித்து சாதனை புரிந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய கல்வி கொள்கையில் 2030ஆம் ஆண்டில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை 50 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை 2020ஆம் ஆண்டின் கல்வி ஆண்டிலேயே தமிழகம் தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு தற்போது 51.4 சதவீதத்துடன் பெரிய மாநிலங்களில் முதல் இடத்தை பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2019-20 கல்வியாண்டில் உயர்கல்வி மொத்த மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை மத்திய அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 27.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த கல்வி ஆண்டில் இந்த விகிதம் 26.3% என இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டும் 50.1.4% உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் இருப்பதை அடுத்து நாட்டிலேயே மூன்றாவது இடத்தை தமிழகம் பிடித்து உள்ளது என்பதும் பெரிய மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிக்கிம் மாநிலம் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 75.8 சதவீதம் பெற்று நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என்பதும் சண்டிகர் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் புதிய கல்வி கொள்கையில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை 50% மேலாக அதிகரிக்க வேண்டுமென 2030ஆம் ஆண்டு வரை மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து நிலையில் 10 ஆண்டுக்கு முன்பே அந்த இலக்கை தமிழகம் உட்பட மூன்று மாநிலங்கள் எட்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com