ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை முதல் நபராக போட்டுக்கொண்ட பார்மா நிறுவன தலைவர்!

ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை முதல் நபராக போட்டுக்கொண்ட பார்மா நிறுவன தலைவர்!

ஏற்கனவே கோவாக்ஸின் கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் இந்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் சமீபத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது.

இந்த தடுப்பூசியை முதல் நபராக கஸ்டமர் சர்வீஸ் பார்மா நிறுவனத்தின் தலைவர் தீபக் அவர்கள் எடுத்துக் கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

91.6% செயல்திறன் கொண்ட இந்த தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஜூலை மாதம் இந்தியாவில் இதன் தயாரிப்பு தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியின் விலை ரூபாய் 995.40 என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை டாக்டர் ரெட்டி ஆய்வு நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்ட உடன் இதன் விலை இன்னும் அதிகமாக குறையும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com