கங்கையில் மிதந்து வரும் உடல்களால் கொரோனா பரவுமா? நிபுணர்கள் விளக்கம்

கங்கையில் மிதந்து வரும் உடல்களால் கொரோனா பரவுமா? நிபுணர்கள் விளக்கம்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலர் கொரோனாவால் உயிரிழந்தவர்களை கங்கை நதியில் தூக்கி வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உடல்கள் கங்கையில் மிதந்து பீகார் வரை செல்வதால் பீகார் மாநில மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை நதிகளில் வீசுவதால் கொரோனா மேலும் பரவுமா? என பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இது குறித்து நிபுணர்கள் கருத்து கூறிய போது ’கங்கை நதியில் உடல்களை போடுவது உண்மையில் தீவிரமான பிரச்சினைதான். ஆனால் அதே நேரத்தில் கங்கை நதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை போடுவதால் கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.

நீர்நிலைகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை போடுவதால் நீர் மாசு அடைய வாய்ப்பு இருக்கிறதே தவிர கொரோனா பரவும் வாய்ப்பு இல்லை என்றும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் நீரில் போடப்பட்டாலும் நீரோட்டத்தில் அடித்து வரும் போது கொரோனா கிருமிகள் நீர்த்துப் போய்விடும் என்றும் அதனால் கொரோனா பரவும் என்ற கவலை பொதுமக்களுக்கு தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் கங்கை நதியில் உடலை போடுவது நீர் மாசுபடுவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் கண்டிப்பாக நீர்நிலைகளில் உடல்களை வீசி எறியக் கூடாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com