இன்று முதல் கொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து.. என்ன ஸ்பெஷல்?

தினமும் 5 முதல் 7 நாட்கள் வரை இந்த மருந்தை கொரோனா நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்று முதல் கொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து.. என்ன ஸ்பெஷல்?

கொரோனா நோயாளிகளுக்கு மே 17-ம் தேதி முதல் புதிய பவுடர் மருந்து விநியோகிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ரெட்டீஸ் லெபாரட்ரீஸ் நிறுவனமும் 2டிஜி என்ற புதிய பவுடரை கண்டுபிடித்துள்ளன.

இந்த 2டிஜி மருந்தை கொரோனா நோயாளிகள் தண்ணீரில் கலந்து பருக வேண்டும். முதற்கட்டமாக 10 ஆயிரம் 2டிஜி கொரோனா பவுடர் மருந்து விநியோகிக்கப்படுகிறது.

இதன் மூலம் கொரோனா நோயின் பாதிப்பு குறையும். ஆக்சிஜன் தேவை மற்றும் ரெம்டெசிவிர் தேவைகளும் குறையும் என பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த 2டிஜி கொரோனா மருந்து என்ன விலை என்ற தகவல்களை வெளியிடவில்லை. தினமும் 5 முதல் 7 நாட்கள் வரை இந்த மருந்தை கொரோனா நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா பரவல் அதிகரிப்பைக் குறைக்க, அவசரக் கால பயன்பாடாக 2டிஜி மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com