கொரோனா தடுப்பூசி பிரச்சனையைத் தீர்க்க மோடிக்கு ஐடியா கொடுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

18 வயது முதல் 44 வயதினருக்காக மத்திய அரசு அளித்த அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டுவிட்டன. கொஞ்சம்தான் உள்ளது, அதுவும் இன்று மாலையுடன் தீர்ந்துபோகும். இது வருத்தமாக உள்ளது. மத்திய அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளேன்.
கொரோனா தடுப்பூசி பிரச்சனையைத் தீர்க்க மோடிக்கு ஐடியா கொடுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டைக் குறைத்து, பிரச்சனையைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முத்தான 4 ஐடியாக்களை வழங்கியுள்ளார்.

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் 18 முதல் 44 வதிலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதை டெல்லி அரசு நிறுத்தி வைத்துள்ளது. நாட்டை கொரோனா மூன்றாம் அலையிலிருந்து காப்பாற்றத் தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த வேண்டும்.

18 வயது முதல் 44 வயதினருக்காக மத்திய அரசு அளித்த அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டுவிட்டன. கொஞ்சம்தான் உள்ளது, அதுவும் இன்று மாலையுடன் தீர்ந்துபோகும். இது வருத்தமாக உள்ளது. மத்திய அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளேன்.

ஒவ்வொரு மாதமும் டெல்லிக்கு 80 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஆனால் இந்த மாதம் 16 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது. ஜூன் மாதத்திற்கு 8 லட்சமாகக் குறைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 50 லட்சம் தடுப்பூசிகளை டெல்லி பெற்றுள்ளது. குறைந்தது 2.5 கோடி தடுப்பூசிகள் டெல்லிக்குத் தேவை.

மாதத்திற்கு 8 லட்சம் தடுப்பூசிகள் மட்டும் டெல்லிக்கு அளித்து வந்தால், அனைவருக்கும் தடுப்பூசி போட 30 மாதங்களாவது ஆகும். இப்படியே சென்றால் இன்னும் எத்தனை அலையாக கொரோனா வரும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது” என்று கூறினார்.

கொரோனா தடுப்பூசி பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கிய 5 யோசனைகள்:

1) இந்தியாவில் உள்ள அனைத்து தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிலும் 24 மணி நேரத்தில் கோவாக்ஸின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய உத்தரவிட வேண்டும்.

2) வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளை வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்க வேண்டும். தடுப்பூசி வாங்க மாநில அரசுகள் ஒருவருக்கொருவராகச் சண்டையிட்டு வருகின்றனர்.

3) சில நாடுகள் தங்களுக்குத் தேவையானதை விட அதிக தடுப்பூசிகளை இருப்பு வைத்துள்ளன. அந்த நாடுகளிடம் அரசு பேசி அவற்றை இந்தியாவுக்கு வாங்கித் தர வேண்டும்.

4) சர்வதேச கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களை 24 மணி நேரத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

இன்று காலை மத்திய அரசு வெளியிட்ட தகவலின் படி மாநில அரசுகளிடம் 1.6 கோடி தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com