வீடுவீடாக சென்று தடுப்பூசி வழங்குங்கள்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்!

வீடுவீடாக சென்று தடுப்பூசி வழங்குங்கள்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவமனைக்கு சென்றால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுமை இழந்த பலர் தடுப்பூசி போட வந்தவர்கள் திரும்பி செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசுக்கு நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வீட்டிற்கு சென்று மருத்துவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி வரும் நிலையில் இந்தியாவில் மட்டும்தான் நீண்ட வரிசையில் தற்போது பொது மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பினர்

குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள் தடுப்பூசிகாக வரிசையில் காத்திருக்கும் நிலையை காண சகிக்கவில்லை என்றும் உடனடியாக மத்திய அரசு வீடு வீடாக சென்று தடுப்பூசி வழங்கும் பணியை தொடங்க வேண்டும் என்றும் இது குறித்த பிரமாண பத்திரத்தை உடனடியாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு கவன குறைவாக இருப்பதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com