கொரோனாவின் 3ம் அலை: சிறுவர்களுக்கு ஆபத்தா?

கொரோனாவின் 3ம் அலை: சிறுவர்களுக்கு ஆபத்தா?

கொரோனா பெருந்தொற்று வைரஸின் கோரப் பிடியில் இந்தியாவே சிக்கித் தவித்து வருகிறது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் தற்போது, கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று முதல் ஒரு வாரத்துக்கு தமிழகம் முழுவதும் அதிக கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்குள் வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இன்னும் சில மாதங்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இந்தியா முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு காரணம், தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களு, நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுவிடும். கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களும் மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுவது குறைவாகத் தான் உள்ளது.

இப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்றுப் பரவும் அபாயம் குறையும் நிலையில், தொற்றின் மூன்றாவது அலையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனப்படுகிறது.

இது பற்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் இயக்குநர் ரந்தீப் குலேரியா, 'கொரோனாவின் மூன்றாம் அலையில் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த நிரூபிக்கப்பட்ட தரவுகளும் இல்லை. இதனால் மக்கள் தேவையில்லாம் அச்சம் கொள்ள வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com