தடுப்பூசி விபரங்களை சொல்லக் கூடாது எனக் கூறிய மத்திய அரசின் உத்தரவை மதிக்காத தமிழக அரசு

தடுப்பூசி விபரங்களை சொல்லக் கூடாது எனக் கூறிய மத்திய அரசின் உத்தரவை மதிக்காத தமிழக அரசு

தங்கள் மாநிலங்களில் எந்த அளவுக்கு கொரோனா தடுப்பூசி கையிருப்பு இருக்கிறது என்பது குறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வெளியிடக் கூடாது என்று ஒன்றிய அரசு, வினோதமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை மதிக்காமல் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கொரோனா தடுப்பூசி குறித்தான விபரங்களை வெளியிட்டு உள்ளார்.

அவர், 'தடுப்பூசிகள் கையிருப்பை மக்களிடம் தெரிவிக்கக் கூடாது என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால், நம்மிடம் எந்தளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் இருக்கின்றன என்பது குறித்தான உண்மையான விபரங்களை பொது மக்களிடம் பொதுத் தளத்தில் தெரிவிப்பது தான் சரியாக இருக்கும். தற்போது தமிழ்நாட்டில் 1,060 தடுப்பூசிகள் தான் கையிருப்பில் உள்ளது' என்று அதிரடியாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக போதுமான கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லாத காரணத்தால், தடுப்பூசி போடும் பணி முற்றிலும் முடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 34 மாவட்டங்களில் ஒரு தடுப்பூசி கூட இல்லாத நிலை இருக்கிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com