இந்திய அளவில் வெகுவாக குறையும் கொரோனா: தமிழகத்தில் மட்டுமே உயர்வு!

இந்திய அளவில் வெகுவாக குறையும் கொரோனா: தமிழகத்தில் மட்டுமே உயர்வு!

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 4 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் இருந்த நிலையில் தற்போது அது இரண்டரை லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. எனவே இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக குறைந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் மட்டும் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் தான் தினசரி அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது என்பதும் மற்ற மாநிலங்களில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் வெகுவாகக் குறைந்து வருகிறது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய அளவிலும் முக்கிய மாநிலங்களிலும் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 243,777 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், இதுவரை இந்தியாவில் மொத்தம் 26,528,846 பேர்கள் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் 3788 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவிற்கு 299,296 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை கொரோனாவில் இருந்து 23,418,523 பேர் இந்தியாவில் குணமடைந்து உள்ளனர். 2,811,027 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 26133 பேருக்கும், தமிழகத்தில் 35873 பேருக்கும், கேரளாவில் 28514 பேருக்கும், கர்நாடகாவில் 31183 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com