பாதிப்பு குறைந்தாலும் உயரிழப்பு அதிகம்: இன்றைய இந்திய கொரோனா பாதிப்பு நிலவரம்

பாதிப்பு குறைந்தாலும் உயரிழப்பு அதிகம்: இன்றைய இந்திய கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை நான்கு லட்சத்திற்கும் அதிகமாக தினசரி கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது ஓரளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. ஆனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நான்காயிரத்திற்கும் அதிகமாக இருந்து வருவது பெரும் கவலையை அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து தற்போது பார்ப்போம்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,57,299

இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்: 2,30,70,365

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,57,630

கொரோனாவால் மொத்த உயிரிழப்புகள்: 2,95,525

கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,194

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 29,23,400

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 19,33,72,819

இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டோர்: 32,64,84,155

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டோர்: 20,66,285

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com