ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் காங்கிரஸ்

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் சாதவ் அம்மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு செய்யப்பட்டார்.
ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜீவ் சாதவ் என்பவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் சாதவ் அம்மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு செய்யப்பட்டார். இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜீவ் சாதவ் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது நிலையில் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் ராஜிவ் சாதவ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மறைந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராஜிவ் சாதவ் அவர்களுக்கு வயது வெறும் 46 என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com