ஊரடங்கை மீறிய இளைஞரின் செல்போனை உடைத்த கலெக்டர்: வீடியோ வைரலானதால் மன்னிப்பு!

ஊரடங்கை மீறிய இளைஞரின் செல்போனை உடைத்த கலெக்டர்: வீடியோ வைரலானதால் மன்னிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் மற்றும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் எந்தவித காரணமுமின்றி வீட்டை விட்டு வெளியே வந்த இளைஞர் ஒருவரின் செல்போனை பிடுங்கி கலெக்டர் ஒருவரே கீழே போட்டு உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுஜாபூர் என்ற பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இளைஞர் ஒருவரை கலெக்டர் கண்டித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த இளைஞரின் செல்போனை வாங்கி கீழே போட்டு உடைத்தார். அதுமட்டுமின்றி அந்த இளைஞரின் கண்ணத்திலும் கலெக்டர் ரன்பீர்சிங் அடித்தார்.

அதுமட்டுமன்றி அவர் காவல்துறையினரையும் அழைத்ததை அடுத்து இளைஞரை காவல்துறையினர்களும் சரமாரியாக அடித்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து கலெக்டருக்கும் காவல்துறைக்கும் கண்டனங்கள் குவிந்து வந்தன. இதனை அடுத்து கலெக்டர் ரன்பீர்சிங் அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com