இளைஞரின் செல்போனை உடைத்த கலெக்டர்: புதிய போன் வாங்கி கொடுக்க உத்தரவு!

இளைஞரின் செல்போனை உடைத்த கலெக்டர்: புதிய போன் வாங்கி கொடுக்க உத்தரவு!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கலெக்டர் ரன்வீர் சர்மா என்பவர் சமீபத்தில் இளைஞர் ஒருவர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கன்னத்தில் அறைந்ததோடு, அவருடைய செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்தார். இதுகுறித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கலெக்டர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ரன்வீர் சர்மா வீடியோ ஒன்றின் மூலம் இளைஞரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் இளைஞரை கன்னத்தில் அறைந்து செல்போனை பறித்து உடைத்த மாவட்ட கலெக்டர் ரன்பீர் சர்மாவுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி இளைஞரின் செல்போனை உடைத்த ரன்வீர் சர்மா, அவருக்கு புதிய செல்போன் தனது சொந்த செலவில் வாங்கி தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இன்று கலெக்டர் ரன்வீர் சர்மா புதிய செல்போனை வாங்கி இளைஞருக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கலெக்டர் இளைஞர் ஒருவரை அடித்த சம்பவத்திற்கு தாங்கள் மிகவும் வருந்துவதாகவும் ஐஏஎஸ் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் வைரலான ஒரே ஒரு வீடியோவால் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com