போபாலில் ரூ.101ஐ தாண்டிய பெட்ரோல் விலை: சென்னையில் என்ன விலை?

போபாலில் ரூ.101ஐ தாண்டிய பெட்ரோல் விலை: சென்னையில் என்ன விலை?

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக ஐந்து மாநில தேர்தல் முடிந்தவுடன் தினமும் கிட்டத்தட்ட பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை 100 தாண்டிய நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் பெட்ரோல் விலை ரூ.101ஐ தாண்டிவிட்டது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 101.77 விற்பனையாகும் டீசல் விலை ரூ.93.07 ஆகவும் விற்பனையாகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல் மும்பையில் ரு லிட்டர் ரூ. 99.94 ஆகவும் டீசல் ரூ. 91.87 ஆகவும் விற்பனையாகிறது என்பதால் நாளை மும்பையில் பெட்ரோல் விலை சதமடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.28 பைசாவாகவும் டீசல் ரூ. 89.39 ஆக விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு இன்று 22 காசுகள் விலை உயர்ந்துள்ளது என்பதும், இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com