தடுப்பூசி சான்றிதழை ஏன் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ய கூடாது: மத்திய அரசு விளக்கம்!

தடுப்பூசி சான்றிதழை ஏன் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ய கூடாது: மத்திய அரசு விளக்கம்!
FellowNeko

கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ் போடும்போதும், இரண்டாவது டோஸ் போடும்போதும் அரசால் சான்றிதழும் வழங்கப்படும். இந்த சான்றிதழை ஆர்வக்கோளாறு காரணமாக பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதையடுத்து தடுப்பூசி சான்றிதழை யாரும் சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவுடன் அவர்களுக்கு ஒரு தற்காலிகச் சான்றிதழ் தரப்படும். அந்த சான்றிதழில் தடுப்பூசி போட்டவரின் பெயர், வயது, முகவரி, ஆதார் எண், இரண்டாம் டோஸ் போட வேண்டிய தேதி உள்ளிட்ட பல விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த தடுப்பூசி சான்றிதழை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்வதால் சம்பந்தப்பட்டவரின் விவரங்கள் தவறான நபர்களிடம் சிக்கி தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கொரோனா வைரஸ் இரண்டாவது தடுப்பு தடுப்பூசி போட்ட உடன் நிரந்தர சான்றிதழும் வழங்கப்படும். அந்த சான்றிதழிலும் இதே போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சான்றிதழ் எதிர்காலத்தில் வெளிநாடு செல்வதற்கு வெளிமாநிலங்கள் செல்வதற்கு தேவைப்படும் என்பதால் ஒரு சிலர் அதனை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்பதால் தடுப்பூசி சான்றிதழையும் சமூக வலைதளங்களில் யாரும் பகிர வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com