கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து: டுவிட்டரின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு!

கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து: டுவிட்டரின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு!

கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என இந்திய அரசை குறை கூறி உள்ள ட்விட்டருக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அரசு, டுவிட்டரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாத சமூக ஊடகங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து ஒரு சில சமூக ஊடகங்கள் இந்திய அரசின் புதிய விதிகளை ஒப்புக்கொண்டது. ஆனால் வாட்ஸ்அப், டுவிட்டர் உள்பட ஒருசில ஊடகங்கள் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்திய அரசின் புதிய சமூக ஊடக விதிகள் கருத்து சுதந்திரத்திற்கு தடை விதிப்பதாக உள்ளது என டுவிட்டர் குற்றஞ்சாட்டி உள்ளது. ட்விட்டரின் இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் சமூக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், சமூக ஊடகங்களின் அலுவலகங்களும் பாதுகாப்பாக இருக்கும் என்றும், சமூக ஊடக நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டுவிடட்ரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மை இல்லை என்றும், இந்திய அரசின் மீது அவதூறு பரப்பும் வகையிலான டுவிட்டர் நிறுவனத்தின் அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com