தனி மனித உரிமை மீறலா? வாட்ஸ் அப் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி

தனி மனித உரிமை மீறலா? வாட்ஸ் அப் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி

மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிகளை ஏற்றுக் கொள்ளாத சமூக வலைதளங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில் பேஸ்புக் டுவிட்டர் உள்பட பல சமூக வலைதளங்கள் புதிய விதிகளை ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து டெல்லி ஹைகோர்ட்டில் முறையீட்டு மனு ஒன்றை வாட்ஸ்அப் நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வாட்ஸ் அப் விவகாரம் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கருத்துக் கூறியுள்ளது. வாட்ஸ்அப் விவகாரத்தில் தனிமனித உரிமைக்கு மதிப்பளிப்பதே எங்கள் நோக்கம் என்றும் அதே நேரத்தில் குற்றத்தை கட்டுப்படுத்த வழிகாட்டுதலை வெளியிட்டால் அதை வாட்ஸ்அப் மறுக்கிறது என்றும் கூறியுள்ளது.

தனி மனித உரிமையை மீறும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றும் அதே நேரத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் போன்ற கடுமையான குற்றங்களை தடுப்பதற்காக தகவல் தேவைப்படுகிறது என்றும் கூறிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தனி மனித உரிமையை வலியுறுத்தும் வாட்ஸ்அப் அனைத்து தரவுகளையும் தாய் நிறுவனம் பேஸ்புக் உடன் பகிர்ந்து கொண்டு வருகிறது என்றும் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com