18 மாநிலங்கள், 5000 நோயாளிகள்: வேகமாக பரவுகிறதா கருப்பு பூஞ்சை?

18 மாநிலங்கள், 5000 நோயாளிகள்: வேகமாக பரவுகிறதா கருப்பு பூஞ்சை?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இருந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் செய்து வருகின்றன. கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்படுவதாக கடந்த சில நாட்களாக வெளி வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட 18 மாநிலங்களில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு சுமார் 5000 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கருப்பு பூஞ்சை நோய் மிக வேகமாகப் பரவி வருவது மத்திய மாநில சுகாதாரத் துறையினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பயன்படுத்தப்படும் Amphotericin B என்ற மருந்து தமிழகத்திற்கு தற்போது மத்திய அரசு அனுப்பியுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக 100 குப்பிகள் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படும் Amphotericin B என்ற மருந்தை மத்திய அரசு அனுப்பியுள்ள நிலையில் தமிழகத்திற்கு 100 குப்பிகள் அனுப்பியுள்ளது. அதேபோல் மற்ற மாநிலத்திற்கு அனுப்பி உள்ள குப்பிகள் எண்ணிக்கை பின்வருமாறு:

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com