அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா: தமிழக அரசு உத்தரவு!

அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா: தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசின் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அரசு பேருந்துகளில் பெண்கள் பயணம் செல்லும்போது அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த தற்போது தமிழக அரசின் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்பயா திட்டத்தின்கீழ் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதனால் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே பெங்களூரு நகரத்தில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்பதும் தமிழ்நாட்டில் தற்போது இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பெண்கள் இனிமேல் பேருந்துகளில் பாதுகாப்புடன் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் சென்னையில் 1400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பல வழித்தடங்களில் பேருந்துகள் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com