இந்திய அளவில் 3 வாரத்தில் 31,000 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்!

இந்திய அளவில் 3 வாரத்தில் 31,000 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்!

இந்திய அளவில் கொரோனா தொற்றுக்கு அடுத்தபடியாக இந்திய அளவில் மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் தொற்று நோய் கருப்பு பூஞ்சை நோய். இவ்வகை தொற்கு கடந்த 3 வாரங்களில் சுமார் 150 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வந்துள்ளது. அதாவது, கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 31,216 பேர் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த காலக்கட்டத்தில் 2,109 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்து உள்ளார்கள்.

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு அம்ஃபாடெரிசின்-பி என்னும் மருந்து தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மருந்தின் பற்றாக்குறையும் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு அதிகரிப்புக்கு ஓர் காரணமாக இருந்து வருகிறதாம்.

மகராஷ்டிராவில் தான் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 7,057 பேர் இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, 609 பேர் மரணமடைந்து உள்ளார்கள். அதேபோல குஜராத், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகமாக உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com