இனி தமிழ் மொழியிலும் பொறியியல் படிக்கலாம்: தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

இனி தமிழ் மொழியிலும் பொறியியல் படிக்கலாம்: தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

வரும் கல்வியாண்டு முதல் தமிழ் உள்பட ஏழு பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி படிக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து வரும் கல்விஆண்டு முதல் மாணவர்கள் தமிழிலேயே இனி பொறியியல் கல்லூரியில் படிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

தாய் மொழியில் கல்வி பயிலும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் கல்வி படிப்பதால் கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் புரியாமல் படித்து வருவதாகவும் கல்வியாளர்கள் பலர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அதே நேரத்தில் ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே தேசிய அளவிலும் உலக அளவிலும் மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க முடியும் என்று இன்னொரு பக்கம் வாதம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிராமத்து மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டும் வகையில் தமிழ் உள்பட ஏழு மொழிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் பள்ளி படிக்கலாம் என அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் பாடங்களைப் படிக்கலாம் என்றும் தாய்மொழியில் பொறியியல் பாடங்கள் படிக்கும் போது மாணவர்கள் அந்த பாடங்களை புரிந்து படிப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நீண்ட காலமாக தமிழ் மொழியில் பொறியியல் கல்வி கற்பிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com