கருப்பு, வெள்ளை பூஞ்சையை அடுத்து மஞ்சள் பூஞ்சை: அதிர்ச்சி தகவல்!

கருப்பு, வெள்ளை பூஞ்சையை அடுத்து மஞ்சள் பூஞ்சை: அதிர்ச்சி தகவல்!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மனித இனமே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் ஏற்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்திலேயே சுமார் 50 பேர் வரை கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோயை கவனிக்காமல் விட்டு விட்டால் உயிருக்கே ஆபத்தாகும் என்றும் எனவே இது குறித்து அறிகுறி தெரிந்த உடனே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கருப்பு வெள்ளை பூஞ்சை தொற்று நோயாகவும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை அடுத்து மஞ்சள் பூஞ்சை ஒன்று புதிதாக தோன்றியிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இந்த மஞ்சள் பூஞ்சை பயங்கரமானது என்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது என்றும் கூறப்பகிறது. இன்னும் என்னென்ன புதுப்புது நோய்களை மனித இனம் சந்திக்க வேண்டியது உள்ளதோ என்ற பயமும் அச்சமும் அனைவர் மனதிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com