'கொரானாவிலிருந்து மீண்டவர்கள் இவற்றில் கவனமாக இருங்கள்'- எய்ம்ஸ் தலைவர் வலியுறுத்தல்

'கொரானாவிலிருந்து மீண்டவர்கள் இவற்றில் கவனமாக இருங்கள்'- எய்ம்ஸ் தலைவர் வலியுறுத்தல்

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தினம் தினம் பல்லாயிரக் கணக்கானவர்கள் குணமடைந்து வருகிறார்கள். இப்படி குணமடைந்து வருபவர்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

'கொரோனா குணமடைந்த பின்னரும் 4 முதல் 12 வாரங்கள் அதன் அறிகுறிகள் இருந்தால், அது கோவிட் சிண்ட்ரோம். 12 வாரங்களுக்குப் பின்னரும் அறிகுறிகள் தொடர்ந்தால் அதி நாண்-கோவிட் எனப்படும்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பலருக்கும், நுரையீரல் செயல்பாடு சாதரணமாக இருந்தாலும் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அதேபோல தொடர்ந்து இருமல் இருக்கலாம். படபடப்பு, அதிக நாடித் துடிப்பு, நெஞ்சு வலி உள்ளிட்டவை இருக்க வாய்ப்புள்ளது.

இவை தவிர உடல் சோர்வு, எலும்பு கூடும் இடங்களில் வலி, உடல் வலி மற்றும் தலை வலி உள்ளிட்டவை தொடரலாம். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், கட்டாயம் மருத்துவ உதவி தேவைப்படும்.

கொரோனாவிலிருந்து தினம் தினம் அதிகப்படியானோர் குணமடைந்து வருவதால் அவர்களை முறையான சிகிச்சை கொடுக்க நாம் மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார் ரன்தீப் குலேரியா.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com