இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 2 மாதங்கள் ஊரடங்கு தேவை: ஐசிஎம்ஆர் தலைவர்

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 2 மாதங்கள் ஊரடங்கு தேவை: ஐசிஎம்ஆர் தலைவர்

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் மட்டுமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் என இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவ் அவர்கள் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் மூன்று லட்சத்திற்கு மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளன. ஒரு சில மாநில அரசுகள் முழு ஊரடங்கை பிறப்பித்து இருந்தாலும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக தலைவர் பல்ராம் பார்கவ் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். கண்டிப்பாக இரண்டு மாதங்கள் ஊரடங்கு அமல் படுத்தினால் மட்டுமே இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்றும் தனித்தனியாக மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்துவது எந்தவித பலனையும் தராது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக முடிவு எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com