45 லட்சம் ஏர் இந்தியா வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்கள் கசிவா? அதிர்ச்சி தகவல்

45 லட்சம் ஏர் இந்தியா வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்கள் கசிவா? அதிர்ச்சி தகவல்

45 லட்சம் ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் கசிந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏராளமானோர் தினமும் பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது தங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பதிவு செய்வது வழக்கம். இந்த நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் டிக்கெட் எடுக்கும் போது பதிவு செய்யப்பட்ட 45 லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கசிந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து ஏர் இந்தியா வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றும்படி ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தி உள்ளதாகவும் இந்த தகவல்கள் கசிவு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் தகவல் கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த தகவல் வெளியானதில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com