’யாஸ்’ புயல் காரணமாக 22 சிறப்பு ரயில்கள் ரத்து: ரயில்வே துறை அறிவிப்பு!

’யாஸ்’ புயல் காரணமாக 22 சிறப்பு ரயில்கள் ரத்து: ரயில்வே துறை அறிவிப்பு!

வங்கக்கடலில் சமீபத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது என்பதும் இந்த புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதால் 4 மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதத்தை மத்திய அரசு அனுப்பியுள்ளது என்பதும் தெரிந்ததே.

தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான புயலுக்கு ’யாஸ்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் உருவானதை அடுத்து 22 சிறப்பு ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. நாளை முதல் வரும் 29ஆம் தேதி வரை இயக்கப்பட இருந்த நாகர்கோவில் - ஹவுரா எக்ஸ்பிரஸ், திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்ட்ரல் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 22 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இந்த ரயில்களின் சேவை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com