2021 இறுதிக்குள் 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்: மத்திய அரசு உறுதி!

2021 இறுதிக்குள் 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்: மத்திய அரசு உறுதி!
Airman 1st Class Anna Nolte

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெறும் என்று மத்திய அரசின் ஆலோசகர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி நிலவுவதில் தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசுத் தரப்பின் இந்த உறுதிப்பாடு நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் ஆலோசகர் வி.கே.பால் தெரிவிக்கையில், 'மொத்தம் இலக்கு வைக்கப்பட்டுள்ள 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களில் கோவிஷீல்டு 75 கோடி டோஸ்களை உள்ளடக்கி இருக்கும். பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் 55 கோடியை உள்ளடக்கியதாக இருக்கும். இன்னும் 5 மாதங்களில் சுமார் 216 கோடி கொரோனா டோஸ்கள் நம் இருப்பில் இருக்கும். அடுத்த ஆண்டு அது 300 கோடிக்கு அதிகரிக்கப் பெறும்' என்று கூறியுள்ளார்.

உலகிலேயே மிகப் பெரும் மருந்து உற்பத்தி நிறுவனங்களைக் கொண்டுள்ள இந்தியா, இதுவரை தன் மக்கள் தொகையில் 3 சதவீதத்துக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியைப் போட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயலற்றத் தன்மையே காரணம் எனப்படுகிறது.

தற்போது மாநில அரசுகள், வெளிச் சந்தைகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தன் பொறுப்பையும் தட்டிக் கழித்துள்ளது மேலும் சர்ச்சையாகி உள்ளது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில், வெளிச் சந்தைகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெற நடவடிக்கை எடுத்து வருகின்றன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com