அடுத்தடுத்து 4 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா: தனி ஆளாக போராடும் கோஹ்லி!

அடுத்தடுத்து 4 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா: தனி ஆளாக போராடும் கோஹ்லி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 13ஆம் தேதி ஆரம்பித்த 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா மட்டுமே 161 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 134 ரன்களுக்கு சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 195 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்தியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் என்று இருந்த நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறினர்

புஜாரா, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் ரஹானா ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதை அடுத்து தற்போது இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் மொத்தத்திலே 285 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சம் 350க்கு மேல் இலக்கு வைத்தால் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதால் இந்திய அணியில் மீதி உள்ள பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கேப்டன் விராட் கோலி மட்டும் தனி ஆளாக நின்று 14 ரன்கள் எடுத்து போராடி வருகிறார்

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com