உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு சிக்கலா?

உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு சிக்கலா?

இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு போனில் ஒரு சில செயலிகளில் கிராஷ் ஏற்பட்டு வருவதாகவும் அதனை சரிசெய்ய முடியாமல் பயனாளிகள் திணறி வருவதாகவும் தெரிகிறது.

இந்த சிக்கலை சீர்செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் இந்த கோளாறு சரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கூகுளின் ஜிமெயில் செயலியே கிராஷ் ஆகி உள்ளதாகவும் அது பயனாளிகளுக்கு பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆண்ட்ராய்டு சிஸ்டம் வெப்வியூ அப்ளிகேஷன் அப்டேட் தான் இதற்கு காரணம் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனை அடுத்து கூகுள் நிறுவனம் இந்த சிக்கலை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்களுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த சிக்கலில் இருந்து உடனடியாக விடுபட வேண்டுமென்றால் ஆண்ட்ராய்டு சிஸ்டம் வெப்வியூவை அன்இன்ஸ்டால் செய்தால் போதும் என்று கூறப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com