கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 12 நோயாளிகள் பரிதாப பலி!

கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 12 நோயாளிகள் பரிதாப பலி!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருபக்கம் கொத்துக்கொத்தாக உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கொரோனா வைரசால் பாதித்தவர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தினால் பலரும் ஆண்டு வருகின்றனர். இந்த நிலையில் சமயத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 12 நோயாளிகள் பலியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்ற மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 12 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாசிக் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த நிலையில் தற்போது அதே பகுதியில் தீ விபத்து காரணமாக 12 நோயாளிகள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவமனையில் ஏற்படும் விபத்துக்களால் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com