அநியாயமா இப்படி அவுட் ஆகிட்டாரே மனுசன்… புஜாராவின் வினோத ரன்வுட்டும் நெட்டிசன்களின் புலம்பலும்! – #ViralVideo

அநியாயமா இப்படி அவுட் ஆகிட்டாரே மனுசன்… புஜாராவின் வினோத ரன்வுட்டும் நெட்டிசன்களின் புலம்பலும்! – #ViralVideo

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், செத்தேஷ்வர் புஜாராவின் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆன விதம் பலரை சோகமாக்கி உள்ளது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆட்டத்தின் மூன்றாவது நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இதில் விளையாடி வருகிறது. நேற்று வரை இந்தியாவுக்குச் சாதகமாக இருந்த இந்தப் போட்டி இன்று காலை இங்கிலாந்துக்குச் சாதகமாக மாறியது. அதற்கு காரணம், இன்று காலை போட்டித் தொடங்கியது முதல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தான். தற்போது இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் விராட் கோலியும், ஆல்-ரவுண்டர் அஷ்வினும் அரைசதங்கள் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தச் செய்தனர். இந்தியா, தற்போதைய நிலையில் இங்கிலாந்தை விட 415 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. அஷ்வின் 67 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

நேற்று கில் அவுட்டான பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கினார் புஜாரா. இன்று மீண்டும் அவர் ரோகித்துடன் களத்துக்கு வந்தார். அப்படி வந்த சிறிது நேரத்திலேயே சுழற் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கிரீஸில் இருந்து ஏறி வந்து, ஏறி வந்து ரன் அடித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பந்து சில்லி பாயின்ட் பகுதியில் ஃபீல்டிங் நின்றிருந்த ஒல்லி போப்புக்கு சென்றது. அவர் டக்கென பந்தை இங்கிலாந்து கீப்பர் பென் ஃபோக்ஸிடம் கொடுத்தார். இந்த சமயத்தில் கிரீஸுக்கு உள்ளே வர புஜாரா முயன்றார். ஆனால், அவரது பேட் பிட்ச்சில் தட்டி கீழே விழுந்தது. இதனால் அவர் ரன் அவுட் ஆனார். புஜாராவின் இந்த ரன் அவுட்டால் அப்செட்டான ரசிகர்கள், தங்களது ஆதங்கங்களை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

புஜாரா அவுட்டான வீடியோ:

அதற்கு நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்கள் தொகுப்பு:

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com