‘என்ன கேள்வி கேக்குறீங்க..?’- நிருபருக்கு எதிராக மாஸ் காட்டிய எடப்பாடியார் #Viral

‘என்ன கேள்வி கேக்குறீங்க..?’- நிருபருக்கு எதிராக மாஸ் காட்டிய எடப்பாடியார் #Viral

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, அவருக்கும் நிருபர் ஒருவருக்கும் நடந்த காரசார விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து அவ்வப்போது நிருபர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு நிருபர்கள் சந்திப்பில், ஒரு பத்திரிகையாளர், 'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியது' பற்றி கேட்கிறார். அவர் நடுவில், 'இதை பெருமை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்…' என்ற வார்த்தையை விட்டு விடுகிறார்.

இதனால் கொதிப்படையும் எடப்பாடியார், அவர் மீது வரிந்து கட்டுகிறார். 'நீட் தேர்வு வந்த பின்னர், எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்கிறார்கள் என்று தெரியுமா. இந்த உள் இட ஒதுக்கீடு மூலம் எத்தனைப் பேர் படிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சும்மா கேள்வி கேட்க வேண்டும் என்று எதையாவது கேட்கக் கூடாது. ஒரு நிருபராக பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள்' என்கிறார். இது குறித்தான எடிட் செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவைப் பார்க்க:

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com