மனைவிக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டார் அரவிந்த் கெஜ்ரிவால்!

மனைவிக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மிக அதிகமாகி வருவதை அடுத்து அங்கு ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சுனிதா கெஜ்ரிவால் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தன்னைத்தானே வீட்டில் வீட்டில் தனிமைபப்டுத்தி கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் அவர் வீட்டில் இருந்து கொண்டே முதல்வர் பணியை கவனித்து வருவதாகவும் டெல்லியில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணிகளை அவர் செய்து கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே ஒரு சில மாநில முதல்வர்களுக்கும், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கும் கொரோனா பரவியுள்ள நிலையில் தற்போது டெல்லி முதல்வர் மனைவிக்கும் கொரோனா பரவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com