ஷிகர் தவான் அபார ஆட்டம்: டெல்லி அணி சூப்பர் வெற்றி

ஷிகர் தவான் அபார ஆட்டம்: டெல்லி அணி சூப்பர் வெற்றி

நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் அபாரமாக விளையாடி 92 ரன்கள் எடுத்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை முடிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர்களில் அற்புதமான ஆட்டம் காரணமாக 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை அடுத்து 196 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 198 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 49 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 92 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதனையடுத்து டெல்லி அணி 4 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com