டேவிட் வார்னர் பொண்ணு குஷி அண்ணாச்சி; காரணம் கிங் கோலி

டேவிட் வார்னர் பொண்ணு குஷி அண்ணாச்சி; காரணம் கிங் கோலி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஒரு சர்ப்ரைஸ் இன்ஸ்டோ போஸ்ட் பதிவிட்டுள்ளார். அது தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இந்நிலையில் டேவிட் வார்னர், தன் இன்ஸ்டா போஸ்டில், 'நாங்கள் டெஸ்ட் தொடரைத் தோற்று விட்டோம் என்பது தெரியும். ஆனால், இங்கு ஒரு பெண்ணுக்கு அது மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நன்றி விராட் கோலி. உங்களின் ஜெர்ஸியை என் மகள் இண்டிக்குப் பரிசாக கொடுத்தமைக்கு. என்னையும் ஆரோன் ஃபின்சையும் தவிர்த்து, அவளுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் நீங்கள் தான். அவருக்கு வி.கே-வை ரொம்ப பிடிக்கும்' என்று ஸ்மைலி இமோஜிக்களோடு க்யூட் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

அந்தப் பதிவுடன், கேப்டன் விராட் கோலி கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் ஜெர்ஸியைப் போட்ட இண்டியின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் டேவிட் வார்னர். இது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com