கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு பெருந்தொற்று உறுதி!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு பெருந்தொற்று உறுதி!

கர்நாடகா மாநிலம் சார்ம்ராஜ் நகர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு பெருந்தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள் உட்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சார்ம்ராஜ் நகர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு பெருந்தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கி வந்ததால் இவர்களுக்கு பெருந்தொற்று உறுதியாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

பெருந்தொற்று உறுதியாகியுள்ள இந்த 5 மருத்துவர்களில், இருவர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 3வது கோவாக்ஸின் தடுப்பூசியும் சில நாட்கள் முன்பு போட்டுக்கொண்டனர். ஆனாலும் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது தடுப்பூசி மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

பொதுவாக ஒரு நோயிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் அது அவர்களை நெருங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டும் மருத்துவர்களுக்கு பெருந்தொற்று உறுதியாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com