இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பொது எதிரியை அழிக்க உதவ தயார்: சீனா அறிவிப்பு

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பொது எதிரியை அழிக்க உதவ தயார்: சீனா அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பொது எதிரியை வீழ்த்த இந்தியாவுக்கு உதவ தயார் என சீனா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்தியா சீனாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் மனித இனத்திற்கே எதிரியாக இருப்பது கொரோனா வைரஸ். மனித குலத்தின் இந்த பொது எதிரியான கொரோனா வைரஸை ஒழிக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏராளமான உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பொது எதிரியான கொரோனாவை அழிக்க இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்க தயார் என்று சீனா அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்க தயார் என்றும் சீனா அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து ஆக்சிஜன் வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளதாகவும் சீனாவின் இந்த அறிவிப்பு குறித்து இந்தியா பரிசீலனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com