முதல்வரை திடீரென சந்தித்த தலைமை செயலாளர்: என்ன காரணம்?

முதல்வரை திடீரென சந்தித்த தலைமை செயலாளர்: என்ன காரணம்?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை திடீரென சற்று முன்னதாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. நேற்றும் நேற்று முன்தினமும் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் முதல்வரின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில்அவர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர்களூம் கலந்து கொண்டிருப்பதாக தெரிகிறது

பிரதமர் மோடியிடம் நடந்த கூட்டம் குறித்து முதல்வரிடம் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிப்பார் என்றும் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழகத்தில் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com